தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

எம்ஆர் பிக்சர்ஸ், ஏ.மகேந்திரன் தயாரிக்கும் படம் 'லவ் இங்க்' . இந்தப் படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். மலையாள நடிகையான டெல்னா டேவிஸ், 'விடியும் வரை பேசு' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். அதன்பிறகு '49ஓ' படத்தில் நடித்தார். கடைசியாக 2017ம் ஆண்டில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தில் நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றவர் அன்பே வா, அபியும் நானும், கண்ணான கண்ணே தொடர்களில் நடித்தார். தற்போது இந்த படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இதில் நடிகர்கள் சுனில் ரெட்டி, யோகிபாபு கேபிஒய் புகழ் ராமர் மற்றும் ரவி மரியா ஆகியோரும் இணைந்துள்ளனர். மேகராஜ் தாஸ் இயக்குகிறார். அர்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார், படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே சரியான திட்டமிடல் இருந்ததால் எளிதில் எங்களால் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்தது. படம் பீல்-குட் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகிறது" என்றார்.