எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை |
சந்தானம் நடித்து 2017ல் வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதன்பின் தமிழில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி' ஆகிய படங்களில் நடித்தார். மராத்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த பான் இந்தியா கன்னடப் படமான 'மார்ட்டின்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஹர்ஷவர்தன் என்பவரைத் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார் வைபவி சாண்டில்யா. திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதங்களுடன், ஹர்ஷவர்தனும் நானும் அன்பு மற்றும் ஒற்றுமையின் இந்த அழகான பயணத்தைத் தொடங்கி உள்ளோம். அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுமணத் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.