துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருபவர். கடந்த 2023ம் ஆண்டில் 'தி ஐ' எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் என அறிவித்தனர்.
இதில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து மார்க் ரவ்லி நடித்துள்ளார். இப்படத்தை டப்னே ஸ்க்மான் இயக்கியுள்ளார். இப்படம் உருவாகி 2 வருடங்களைக் கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதற்கிடையில் க்ரீக் மற்றும் லண்டன் இண்டர்நேஷனல் திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதன் டிரைலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படம் சைகாலஜிகல் த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது.