சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல சமையற்கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான சர்ச்சை தான் இப்போது ஊடகங்களில் பேசு பொருளாகி வருகிறது. தனது திறமையான சமையற்கலையால் புகழின் உச்சம் தொட்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜ், சர்க்கஸ் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இதனைதொடர்ந்து சில மாதங்களுக்கு முன் நிறைவுற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதன் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
அதேசயம் மீண்டும் மிஸ் மேகி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது. அதற்கேற்றார் போல் ஜாய் கிரிஸில்டாவும் தன் இன்ஸ்டாகிராமில் ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டும், காதலர் தினத்தை அவருடன் கொண்டாடியதாக அறிவித்தும் போஸ்ட் போட்டிருந்தார்.
இந்த சர்ச்சைகள் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் முதன் முறையாக விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், 'என்னை பற்றி சோஷியல் மீடியாவில் பரவி வரும் செய்திகள் பற்றி எனக்கு தெரியும். என் வாழ்க்கை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சில விஷயங்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. என்னுடய குடும்பத்தில் எந்த பிரச்னையும் கிடையாது. அவசியம் ஏற்பட்டால் அதுகுறித்து விளக்கமாக சொல்வேன். என்னுடைய மிகவும் பர்சனாலான வாழ்க்கை குறித்து நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை' என அதில் கூறியுள்ளார்.