நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கன்னடத்தில் சில படங்களில் நடித்திருப்பவர் ரன்யா ராவ். இவர் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த நிலையில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவை துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்துள்ளார்கள். தனது பெல்ட்டில் 14 கிலோ தங்க கட்டிகள், 800 கிராம் தங்க நகைகளை அவர் பதுக்கி வைத்துள்ளார். அதோடு ரன்யா ராவ் கர்நாடகத்தைச் சேர்ந்த டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் மகள் ஆவார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ரன்யாராவ் டிஜிபியின் மகள் என்பதால் அவருக்கு வழக்கமான சோதனைகள் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்த அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.