துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் தேவரகொண்ட நடிப்பில் தற்போது உருவாகி வரும் கிங்டம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. வரும் மே 30ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தை கவுதம் தின்னனூரி இயக்கியுள்ளார். அனிருத்இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக ரவி கிரண் கோலா என்பவரது டைரக்ஷனில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவர் ராஜா வாரு ராணி காரு என்கிற படத்தை இயக்கியவர். விஜய் தேவரகொண்டாவின் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ராஜு தயாரிக்கிறார். தி பேமிலி ஸ்டார் படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவும் தில் ராஜூவும் இந்த படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.
சமீபத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான சீதம்மா வஹிட்லோ ஸ்ரீமல்லி செட்டு என்கிற படத்தின் ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தில் ராஜு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது விஜய் தேவர்கொண்டாவின் படத்திற்கு ரவுடி ஜனார்த்தனா என டைட்டில் வைக்க இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் விஜய் தேவரகொண்ட நடித்து வந்த அவரது படத்திற்கு பல நாட்களாக தலைப்பு வைக்கப்படாமல் பில்டப் கொடுத்து சமீபத்தில் கிங்டம் என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், இன்னும் ஆரம்பிக்கவேபடாத விஜய் தேவரகொண்டாவின் பட டைட்டிலை அதன் தயாரிப்பாளரே இப்படி எந்த பில்டப்பும் இல்லாமல் போட்டு உடைத்து விட்டார் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.