அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் |
2002ம் ஆண்டு வெளிவந்த படம் 'துள்ளுவதோ இளமை'. தனுஷ் அறிமுகமான இந்த படத்தில் அவருடன் இணைந்து அறிமுகமானவர் அபிநய் கிங்கர். தனுசின் நண்பராக நடித்தார். அதன்பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், 'பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, 'ஆரோகணம்', என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
43 வயதான அபிநய்க்கு கல்லீரல் தொற்று பிரச்னை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு அவர் உயிரை காப்பாற்ற 28 லட்சம் ரூபாய் தேவைப்படுதாகவும், நிதி உதவி செய்யுமாறும் நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அபிநய் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பத்தினரும் வறுமை நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.