தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” |
தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அவருக்கு பிறகு சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று, தான் சிறுவனாக நடித்த போது ஒரு பட்ட பெயரை சூட்டிக்கொண்டார். என்றாலும் அந்த பட்டத்தை அவர் தொடரவில்லை. அதையடுத்து தனுசுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு சூட்டினார். ஆனால் ரஜினி ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று சொல்லி அதை அவர் ஏற்கவில்லை.
இப்படியான நிலையில், கதையின் நாயகியாக தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார் நயன்தாரா. ஆனால் சமீபகாலமாக தான் நடித்த சில படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததை அடுத்து இனிமேல் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று சமீபத்தில் கேட்டுக் கொண்டார் நயன்தாரா.
இந்த நிலையில் நடிகை குஷ்பு இடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை நயன்தாரா தவிர்த்து குறித்து கேட்டபோது, ''நடிகர் நடிகைகளுக்கு பட்டம் கொடுக்க வேண்டியதில்லை. நான் நடித்தபோதெல்லாம் யாருக்கும் இது போன்ற பட்டங்கள் கொடுக்கப்படவில்லை. அதனால் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தவிர்த்து இருப்பது சரியான முடிவாகவே நான் பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்க்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். மற்றபடி எந்த நடிகர்களையும் பட்டப்பெயர் வைத்து அழைக்காமல் பெயரை சொல்லி அழைத்தாலே போதுமானது என்பதே என்னுடைய கருத்து'' என்று கூறினார் குஷ்பூ.