தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2025ம் ஆண்டில் தியேட்டர்களில் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துவிட்டது. நேற்று மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து 'அம்பி, அஸ்திரம்' ஆகிய படங்கள் பின்வாங்கிவிட்டன.
“படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி” ஆகிய 7 படங்கள் மட்டுமே நேற்று வெளியாகின. இவற்றில் ஒரு படம் கூட ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவைக்கவில்லை என தியேட்டர்காரர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.
படம் வெளியான தினத்தில் யு டியூப் சேனல்கள், தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுப்பது வழக்கம். நேற்று அவர்கள் சுற்றி வந்ததில் பல தியேட்டர்களில் பத்து பேர் கூட படம் பார்க்க வரவில்லை என்று சொன்னார்கள்.
ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த 'கிங்ஸ்டன்' படத்திற்காவது ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தால் அதற்கும் கூட்டம் வரவில்லை. பத்திரிகையாளர் காட்சியில் பாராட்டுக்களைப் பெற்ற 'ஜென்டில்வுமன், எமகாதகி' ஆகிய படங்களுக்கும் ரசிகர்கள் வரவில்லை என்கிறார்கள். தமிழ் சினிமா நிலை இப்படியே போனால் என்ன ஆகும்?.
ஒரே நாளில் இத்தனை படங்களை வெளியிடுவதை எந்த ஒரு சங்கங்களும் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை என்று தியேட்டர்காரர்கள் வருத்தப்படுகிறார்கள்.