தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2025ம் வருடம் ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகியது. அது போலவே நேற்று முன்தினம் 7 படங்கள் வெளிவந்தது.
அதிகமான படங்கள் வெளிவருவதால் அவற்றிற்கு குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. சில படங்களுக்கு ஒரு சில தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் வந்தது.
வரும் வாரம் மார்ச் 14ம் தேதியும் 8 படங்கள் வரை வெளியாக உள்ளது. “டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன், பெருசு, ராபர், ஸ்வீட் ஹார்ட், வருணன்” ஆகியவற்றுடன் 'ரஜினி முருகன், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
தொடர்ந்து அடிக்கடி இத்தனை படங்கள் ஒரே வாரத்தில் வெளிவருவதால் யாருக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. அவ்வளவு படங்களையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். தற்போது தேர்வுகளும் நடந்து வருகிறது. ஆனால், பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு திரையுலகத்தில் எழுந்துள்ளது.