நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துவிட்ட விஜய் தற்போது தான் நடித்த வரும் 69வது படமான ஜனநாயகன், தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்த பாபி தியோல் அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். அந்த படம் வரவேற்பை பெற தவறிய நிலையில் தற்போது ஜனநாயகன்படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பாபி தியால் கூறும்போது, “தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறேன். அவர் உண்மையிலேயே ஸ்வீட் ஹார்ட் கொண்டவர். எப்போதுமே அன்பாகவும் பணிவாகவும் பழகக் கூடிய நபராக இருக்கிறார். குறிப்பாக அவரது எளிமையும் ரசிகர்களை அவர் அரவணைத்து செல்லும் மனிதத்தன்மையையும் பார்த்து நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.