மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர் என்ற படம் திரைக்கு வந்த நிலையில், அடுத்து சக்தி திருமகன் என்ற படம் வெளியாக உள்ளது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண்பிரபு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் வாகை சந்திரசேகர், சுனில், செல் முருகன், பிரியா ஜித்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது இதன் டீசர் வெளியாகியிருக்கிறது.
அதில், தலைமை செயலகத்துக்குள் டீ விற்கச் செல்லும் ஒரு சிறுவன், அங்கு நடக்கும் சீக்ரெட்டை தெரிந்து கொண்டு தான் பெரியவன் ஆனதும் 6000 கோடிக்கு மேல் மோசடி செய்யும் ஒரு செயலில் ஈடுபடுகிறான். அதையடுத்து என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதை களமாக அமைந்துள்ளது. ஏற்கனவே தான் இயக்கிய அருவி படத்தை போன்று சக்தி திருமகன் படத்தையும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சமூக பிரச்சனையை மையமாக கொண்ட கதையில் இயக்கி இருக்கிறார் அருண் பிரபு. இதை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்துள்ளார்.