தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
கன்னட திரையுலகைச் சேர்ந்த நடிகையும் கர்நாடகாவை சேர்ந்த போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் சமீபத்தில் விமானம் மூலம் துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இவர் கன்னடத்தில் இரண்டு படங்களிலும் தமிழில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த வாகா என மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ளார்.
இதில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் 2016ல் வாகா திரைப்படம் வெளியானது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணான இவர் மீது இந்திய ராணுவ வீரரான விக்ரம் பிரபு காதலில் விழுந்து அதற்காக எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்று பிரச்சனைகளை சந்திப்பது தான் கதை. இந்த படம் வெளியான சமயத்தில் வரவேற்பை பெற தவறி தோல்வி படமாக அமைந்தது.
இந்த நிலையில் தங்க கடத்தலில் ரன்யா ராவ் கைது விவகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பு செய்திகளில் அடிபட்டு வருவதால் பலரும் அவர் நடித்த படம் எது என தேடி வருகிறார்கள். அந்த வகையில் வாகா படத்தை இந்த நேரத்தில் ஹிந்தியில் டப்பிங் செய்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல இந்த படத்தை தயாரித்த நிறுவனமே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு யூட்யூப்பில் இலவசமாகவே இந்த படத்தை பதிவேற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.