விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சோபிதா துலிபாலா. அதன்பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழ்நாட்டில் அஜித்தை போன்று தெலுங்கில் நாக சைதன்யா கார் ரேசர். அவர் தனது மனைவி சோபிதாவுக்கு கார் ரேஸ் பயிற்சி அளித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளா. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சத்தமே இல்லாமல் மனைவிக்கு வெளிநாட்டில் கார் ரேஸ் பயிற்சி அளித்து வருகிறார் நாக சைதன்யா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டாத துலிபியா பெண்களுக்கான கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க முடிவு செய்திருக்கிறாராம்.