தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
விக்ரம் பிரபு நடித்து 2016ல் வெளிவந்த 'வாகா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரன்யா ராவ். 'மானிக்யா, படாகி' ஆகிய கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ரன்யா ராவ் சமீபத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருடன் அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து விமானத்தில் பெங்களூரு விமான நிலையம் வந்த போது ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். சுமார் 14 கிலோ எடையுள்ள 24 காரட் தங்கத்தை அவர் மறைத்து வைத்து கொண்டு வந்தது சோதனையில் பிடிபட்டது. அவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 12 கோடி. கடந்த ஆறு மாதங்களில் 27 முறை துபாய் சென்று வந்துள்ளார் ரன்யா.
அவரது வளர்ப்புத் தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல் துறையில் டிஐஜி ஆக இருக்கிறார். அவருக்கும் இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு ஒன்றில் ரன்யாவின் கணவர் ஜதின் ஹுக்கேரி தானும், ரன்யாவும் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டாலும், டிசம்பர் மாதம் முதல் தனித் தனியாக வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்து வாழ்வதாகக் கூறியுள்ளார்.
கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜதின் மீது மார்ச் 24 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ரன்யாவின் ஜாமீன் வழக்கு விசாரணை நாளை நீதிமன்றத்தில் வருகிறது.