நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. படுதோல்வியை சந்தித்த படத்தின் பாடல்களும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருந்தார் இசையமைப்பாளர் தமன்.
'பாய்ஸ்' படத்தில் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் ஷங்கருடன் இசையமைப்பாளராக அவர் பணிபுரிந்த முதல் படம். படத்தின் தோல்வியும், பாடல்கள் வரவேற்பைப் பெறாததும் அவரை நிறையவே வருத்தப்பட வைத்துள்ளது.
சமீபத்திய 'பாட்காஸ்ட்' ஒன்றில் 'கேம் சேஞ்ஜர்' பாடல்கள் வரவேற்பைப் பெறாமல் போனதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
“ஒரு பாடல் என்பது இசை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. என்னால் 25 மில்லியன் பார்வைகள் வரை ஈர்க்க முடியும். ஒரு மெலடி பாடல் 50 மில்லியன் பார்வைகளை வரவழைக்கும். ஆனால், அதன்பின் நடன இயக்குனர்களின் கையில் உள்ளது. அந்தப் பாடல் திரையில் வரவேற்பைப் பெற வேண்டும். நடன இயக்குனர்கள் சரியான அசைவுகளை வைக்க வேண்டும்.
'கேம் சேஞ்ஜர்' படத்தில் 'ஜருகண்டி, ரா மச்சா ரா, ஹைரானா' ஒரு பாடலில் கூட 'ஹுக் ஸ்டெப்' இல்லை. ஆனால், 'அலா வைகுந்தபுரம்லோ' பாடலில் ஒவ்வொரு பாடலிலும் சரியான 'ஹுக் ஸ்டெப்' இருந்தது. நடன இயக்குனர் மற்றும் நாயகன் அதற்குப் பொறுப்பானவர்கள். நடனம் சரியாக இருந்தால், அதை ஒளிப்பதிவாளரும் அற்புதமாக படம் பிடிப்பார். 'கேம் சேஞ்ஜர்' படத்தில் அது தவறாகப் போய்விட்டது. 'ஹுக் ஸ்டெப்ஸ்' இல்லாததால் அது ரசிகர்களுடன் 'கனெக்ட்' ஆகாமலேயே போய்விட்டது,” என்று கூறியுள்ளார்.
தமனின் கருத்துப்படி சரியாக நடனத்தை தர வேண்டியது நடன இயக்குனர்களின் கையில் உள்ளது. அதை வாங்க வேண்டியது இயக்குனரின் பொறுப்பும் கூட. அதனால், இயக்குனர் ஷங்கரையும் சேர்த்தே குறை சொல்வது போல உள்ளது.