கழட்டி விட்ட தம்பியால் புலம்பும் இயக்குனர் அண்ணன் | அருளானந்தபுரம் டூ ஹாலிவுட் ஜெயித்த ஜெர்மி எர்னஸ்ட் | பல்லாண்டு வாழ்க, சந்திரமுகி, லோகா சாப்டர் 1 - ஞாயிறு திரைப்படங்கள் | ‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா |

ராயன் படத்தை அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்த தனுஷ், தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைக்கு வரும் அதே ஏப்ரல் பத்தாம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இட்லிக்கடை படத்தில் தனுஷ், நித்யா மேனன் நடிக்க வேண்டிய சில முக்கியமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் இருவரது கால்சீட் ஒரே நேரத்தில் கிடைக்காதால் தாமதமாகி வருகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளோம். தனுஷ் - நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்ததும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.