நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தது என சர்ச்சை எழுந்தது. அது குறித்து வருத்தம் தெரிவித்த மோகன்லால் அக்காட்சிகளை நீக்குவோம் என உறுதியளித்தார். அதன்பின் அக்காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்து நேற்று முதல் அது திரையிடப்பட்டது.
இதனிடையே, இப்படம் தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தடைகளை உடைத்தெறிந்து 200 கோடியை வசூலித்து, 'எம்புரான்' வரலாறு படைத்துள்ளது,” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்களுக்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்துள்ளது. 200 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் 250 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.