சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜிவி பிரகாஷ் இருக்கிறார். சிறுவயது முதலே தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்தாண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இவர்கள் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி காரணம் என பேச்சு எழுந்தது. இருவரும் பேச்சுலர், கிங்ஸ்டன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இதுதொடர்பாக கிங்ஸ்டன் பட புரொமோஷனில் கூட திவ்ய பாரதியிடம் கேள்வி எழுந்தபோது, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார். இருப்பினும் தொடர்ச்சியாக இருவரையும் தொடர்புப்படுத்தி கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுபற்றி திவ்யபாரதி இன்ஸ்டாவில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட ஒருவரின் குடும்ப பிரச்னையில் என் பெயரை இழுப்பது நியாயமில்லை. ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருபோதும் நடிகரையோ, திருமணமானவரையோ நான் டேட்டிங் செய்ய மாட்டேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அவை எல்லை மீறி செல்வதால் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நான் வலிமையான பெண், இதுபோன்ற வதந்திகள் என்னை சோர்வடைய செய்யாது. வதந்திகளை தவிர்த்து நல்ல உலகத்தை உருவாக்க முயற்சிப்போம். இந்த விவகாரத்தில் இதுவே எனது முதலும், கடைசியுமான விளக்கம்''
இவ்வாறு திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.