மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சமீபத்தில் டிவி நடிகை ஸ்ருதி நாராயணின் ஆபாச வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு நடிகை ஷர்மிளா, பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழில் அம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருமான நடிகை சனம் ஷெட்டி தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛ஸ்ருதி நாராயணின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களிடம் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். இது தனிப்பட்ட விஷயம் கிடையாது. இது ஒரு வியாபாரம். காஸ்டிங் கவுச் என்கிற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட ஒரு செயல்.
ஆடிஷன் என்ற பெயரில் என்னனாலும் கேட்பீர்களா. இத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்து நீங்கள் நல்லா இருப்பீங்களா. அது போலியான வீடியோ என ஸ்ருதி கூறுகிறார். அது உண்மை என்றால் அவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளாலும், இதுபோன்ற காஸ்டிங் கவுச்சாலும் என்னைப் போன்ற பல நடிகைகளுக்கு இன்று சினிமா வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்களே உங்கள் சினிமா துறை நாறிப் போய் உள்ளது. முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, நியாயமான பட வாய்ப்புகள் வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.