நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக கிட்டத்தட்ட புது முகங்கள் என்கிற அளவில் வெளியான ‛பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மமீதா பைஜூ, விஜய் மற்றும் சூர்யா படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடிக்கும் அளவிற்கு பிரபலமானார். அதேபோல படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நஸ்லேன் மற்றும் அவரது நண்பராக நடித்த சங்கீத் பிரதாப் ஆகியோருக்கும் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகின்றன.
அப்படி நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ள அவரது இரண்டாவது படம் ‛ஆலப்புழா ஜிம்கானா' வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. மம்முட்டி நடிப்பில் வெளியான போலீஸ் ஆக்சன் படமான ‛உண்ட' மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் அடிதடி சண்டை காட்சிகளுடன் வெளியான ‛தள்ளுமால' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். கல்லூரியில் சேர விரும்பும் இளைஞர்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கதாநாயகன் நஸ்லேன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட பிரபலமான கல்லூரியில் சேர விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கே இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக அந்த கல்லூரியில் சேர நினைக்கும் அவர்கள் இதற்காக பாக்ஸிங் கற்றுக் கொள்ள செல்கிறார்கள். அவர்கள் பாக்சிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னால் நடக்கும் சம்பவங்கள், அதன் பிறகு அவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததா என்பதை எல்லாம் மையப்படுத்தி இந்த படம் காமெடி கலந்து உருவாகியுள்ளதாம்.