டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமானார். யோகா மாஸ்டர் தவான் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், அதன் பிறகும் எப்போதும் போல் தனது இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் தான் கிரிவலம் சென்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.
அதில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தனக்கு நிரந்தரமான அமைதியை தருவதாகவும், அப்போது ஒரு பவர் வருவதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது என்றும் பதிவிட்டுள்ள ரம்யா பாண்டியன், இந்த கிரிவல பாதையின் போது என்னுடன் வந்த ஒருவர், நீங்கள் ஒரு தேவதை, உங்களுடன் கிரிவலப் பாதையில் நடப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டார் எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.