கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
‛குட் பேட் அக்லி' படத்தில் ‛ஒத்த ரூவாய் பாடல்' உள்ளிட்ட தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் ஏப்., 10ல் வெளியான படம் ‛குட் பேட் அக்லி'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தபடம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 5 நாட்களில் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது.
சமீபகாலமாக பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்தி டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த படத்தில் ‛‛தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..., ஒத்த ரூவாய் தாரேன்...'' போன்ற சில பாடல்களை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக இளையராஜா இசையில் வெளிவந்த ‛‛ஒத்த ரூவாய் தாரேன்..., இளமை இதோ இதோ..., என் ஜோடி மஞ்சக்குருவி...'' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் அவரது வக்கீல், ‛குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த பாடல்கள் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.