தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1979ம் ஆண்டு வெளியான படம் 'கல்யாணராமன்'. பிளாக் காமெடி படம். இந்த படத்தை ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார் மற்றும் பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை வசனம் எழுதினார். கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்தனர்.
ஒரு தேயிலைத் தோட்ட உரிமையாளரின் அப்பாவி மகனான கல்யாணம், ஒரு ஏழைப் பெண்ணை காதலிக்கிறார். அவர் சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்படுகிறார். பின்னர், கல்யாணம் ஒரு பேயாக மாறுகிறார். வெளிநாட்டில் இருக்கும், அவரது இரட்டை சகோதரர் ராமன் உண்மையை அறிந்து பழிவாங்கத் திரும்புகிறார். ராமன் உடலுக்குள் புகுந்து கல்யாணம் எப்படி தன்னை கொன்றவர்களை பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
இந்த படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. இதே படம் ஹிந்தியில் கசாப் ( 1982) என்றும் கன்னடத்தில் ஸ்ரீராமச்சந்திரா ( 1992) என்றும் ரீமேக் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சி 1985ல் 'ஜப்பானில் கல்யாணராமன்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
'கல்யாணராமன்' படத்தின் கதை, பஞ்சு அருணாசலத்தின் கதையோ, இயக்குனர் ரங்கராஜன் கதையோ அல்ல. 1948ம் ஆண்டில் வெளிவந்த 'இது நிஜமா' என்ற படத்தின் கதை. இந்த கதையை அப்படியே உல்டா செய்து உருவானதுதான் கல்யாணராமன். கல்யாண ராமன் படத்தில் இரட்டை சகோதரர்களில் ஒருவர் இந்தியாவில் கொலை செய்யப்படுவார் பழிவாங்க இன்னொரு சகோதரர் வெளிநாட்டில் இருந்து வருவார். 'இது நிஜமா' படத்தில் வெளிநாட்டில் கொலை செய்யப்படும் சகோதரர் ஆவியாக இந்தியா வருவார். அவருக்கு இங்குள்ள சகோதரர் உதவி செய்வார்.
'இது நிஜமா' படமும் அதை இயக்கிய கிருஷ்ணகோபாலின் கதையே, திரைக்கதை, வசனம் எழுதிய வீணை பாலச்சந்தர் கதையோ அல்ல 1945ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான 'வொண்டர் மேன்' என்ற படத்தின் கதை.
'இது நிஜமா' படத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர் இரட்டை சகோதரர்களாக நடித்தார், நாயகிகளாக சரோஜினியும், என்.ராஜமும் நடித்தனர். இதுவும் மிகப் பெரிய வெற்றிப் படம்.
அப்போதெல்லாம் காப்பி ரைட் சட்டம் இல்லாததால் இதுபோல பல காப்பிகள் அப்போது அடிக்கப்பட்டது.