தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இன்று இரவு இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.
இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'கனிமா' பாடலின் லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியானது. ஒரு திருமண மண்டபத்தில் கொண்டாட்டமான பாடலாக அமைந்த பாடல் அதன் டியூனாலும், விவேக்கின் பாடல் வரிகளாலும் உடனடியாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. எண்ணற்ற ரீல்ஸ் வீடியோக்கள் அப்பாடலை வைத்து வெளியாகி உள்ளது.
சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் சந்தோஷ் நாரயணன் உள்ளிட்டவர்கள் ஆடிய நடனம்தான் அப்பாடலுக்கான ஹைலைட்டாக அமைந்துள்ளது. படம் வெளிவந்து முழு வீடியோவும் வெளிவந்தால் இன்னும் அதிக வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தத் திருமண கொண்டாட்டப் பாடல் இன்னும் 'வைப்' ஆகவே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்குள் அடுத்து ஒரு திருமண கொண்டாட்டப் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் முதல் சிங்கிளான 'ஜிங்குச்சா' பாடலை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
கமல்ஹாசன் எழுதியுள்ள இந்தப் பாடலை வைஷாலி சமன், சக்தி ஸ்ரீ கோபாலன், ஆதித்யா ஆர்கே ஆகியோர் பாடியுள்ளார்கள். இந்தப் பாடலும் ரசிகர்களிடம் 'வைப்' ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் மாதவன், ஷாலினி நடித்து வெளிவந்த 'அலையபாயுதே' படத்தில் இடம் பெற்ற 'யாரோ யாரோடி' பாடல் திருமணக் கொண்டாட்டப் பாடலாக அப்போதைய ரசிகர்களிடம் பெரிய 'வைப்'ஐ ஏற்படுத்தியது..
மீண்டும் ஒரு திருமணக் கொண்டாட்டப் பாடலை மணிரத்னம், ரகுமான் கொடுத்துள்ளார்கள். இப்பாடலின் முடிவில் கமல்ஹாசனை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்துள்ளார் மணிரத்னம்.