சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமிலி'. வருகிற மே 1ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் "நானென்லாம் சிம்ரனை ரசித்து பார்த்து வளர்ந்த ரசிகன். அவர் ஜோடியாக நடிப்பேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இப்போதும் அவர் இளமையோடு இருக்கிறார். இன்னும் ஹீரோயினாக நடிக்கிறார். அவரோடு நான் நடிப்பதை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். ஏன் நானென்லாம் சிம்ரனோடு நடிக்க கூடாதா? அதற்கான தகுதி எனக்கில்லையா?" என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் சசிகுமாருடன் ஜோடியாக நடித்தது பற்றி சிம்ரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “நல்ல குடும்ப கதையாக இருப்பதால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்துக்கு உடனடியாக ஓ.கே. சொன்னேன். இன்னொரு காரணம், சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய டைரக்டர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்கு முதலிடம். அந்தவகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். இனி அடுத்தடுத்து குடும்ப பாங்கான கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.