சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் நாளை வெளியாக உள்ளது. தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
இப்படத்திற்கான பட்ஜெட்டை ஐந்து மொழி ஓடிடி உரிமைகள் மூலமே எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு வேண்டிய தொகை வந்துவிட்டது. தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்தால் தயாரிப்பாளருக்குக் கூடுதல் லாபம். வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு ஒரு வருவாய்.
இருந்தாலும் தியேட்டர்களில் கிடைக்கும் வசூல்தான் ஒரு ஹீரோவுக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கித் தருகிறது. அந்த விதத்தில் இந்தப் படத்தின் வெற்றி சூர்யாவுக்கு மிக முக்கியமானதாக உள்ளது. சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த 'கங்குவா' படம் வியாபார ரீதியாக தோல்விப் படம். அதற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் தியேட்டர்களில் வெளிவந்த “எதற்கும் துணிந்தவன், காப்பான், என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம், சி 3, 24, மாசு என்கிற மாசிலாமணி, அஞ்சான்'' ஆகிய படங்கள் பெரிய வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை. சூர்யாவின் கடைசி கமர்ஷியல் வெற்றி என்றால் 2013ல் வெளிவந்த 'சிங்கம் 2' படத்தை வேண்டுமானால் சொல்லலாம்.
அதே சமயம், ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' ஆகிய இரண்டு படங்கள் சூர்யாவைப் பற்றி இப்போதும் பேச வைத்துக் கொண்டிருக்கும் படங்களாகக் காப்பாற்றி வருகின்றன. ஆக, சூர்யாவுக்கு தியேட்டர் வெற்றி, வசூல் என்பது சிறப்பாகக் கிடைத்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, இந்த 'ரெட்ரோ' வெற்றி அவருக்கு முக்கியமானது.
அவருடன் சேர்த்து படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்கும் முக்கியமானது. பூஜா நடித்து கடைசியாக வெளிவந்த படங்களில் தமிழில் 'பீஸ்ட்' சுமாரான வரவேற்பையே பெற்றது. தெலுங்கில் 'எப் 3' படம் வசூலைத் தந்தது. அதே சமயம் ஹிந்தியில் வெளியான 'சர்க்கஸ், கிசி கா பாய் கிசி கி ஜான், தேவா' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தது.
'ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து 'ஜனநாயகன், காஞ்சனா 4' என அடுத்தடுத்து படங்கள் அவருக்கு வர உள்ளதால் இந்த வெற்றி அவசியமாகிறது.