சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மதுரை வந்த விஜய்க்கு ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக ''மதுரையில் ரசிகர்கள் யாரும் எனது வாகனத்தை பின் தொடர வேண்டாம்'' என விஜய் கூறியுள்ளார். ஆனால் அதை ரசிகர்கள் கேட்கவில்லை.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கொடைக்கானலில் நடக்கும் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மதுரைக்கு விமானத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானலுக்கு காரில் செல்கிறார். முன்னதாக விஜய் வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் காலை முதலே மதுரை விமான நிலையத்தில் கூடினர்.
முன்னதாக மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்த விஜய் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். த.வெ.க., கட்சி துவக்கிய பிறகு விஜய் நிருபர்களை சந்திப்பது இது முதல் முறையாகும்.
அப்போது விஜய் கூறியதாவது: மதுரை மக்களுக்கு என்னுடைய வணக்கம். எனது வேலைக்காக, ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நான் செல்கிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணில், கட்சி சார்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன். ஒரு மணி நேரத்தில் நான் என் வேலையை பார்க்க போகிறேன். நீங்களும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்.
மதுரையில் என்னுடைய வேன், கார் பின்னாடி யாரும் பின் தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவது, ஹெல்மெட் இல்லாமல் செல்வது, டூவீலர் மேல் நின்று பயணிப்பது போன்று வராதீர்கள். இதனை பார்ப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. மதுரை விமான நிலையத்தில் இதனை சொல்ல முடியாது. சூழ்நிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. இவ்வாறு விஜய் கூறினார்.
மதுரையில் வரவேற்பு
மதுரை சென்ற நடிகர் விஜய்க்கு, விமான நிலையத்தில் இருந்து திறந்த வேனில் வந்தார். அவர் மீது தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றபடி சென்றார்.
சொல் பேச்சு கேட்காத ரசிகர்கள்
விஜய்யின் வருகையின் போது, மதுரை விமான நிலையத்தில் குவிந்த த.வெ.க.,வினர் மற்றும் ரசிகர்கள் தடுப்புகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. மேலும், விஜய்யின் வேண்டுகோளை நிராகரித்து, கொடைக்கானல் செல்லும் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.