நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
விஜய், அஜித் தமிழ் மீடியாவிடம் பேசி பல ஆண்டுகள் ஆச்சு. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது தங்கள் படங்கள் வெளியாகும் சமயத்தில் இவர்கள் பேசி வந்தனர். அசல் படத்துக்கு பின் மீடியாவினருடன் பேசுவதை அஜித் நிறுத்திவிட்டார். எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். (கார் ரேஸ் குறித்து துபாயில் சமீபத்தில் ஓரிரு பேட்டி தந்தார். டில்லியில் பத்ம பூஷன் விருது வாங்கிவிட்டு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். விஜய் வேலாயுதம் படத்துக்குபின் நிருபர்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார்.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது மட்டும் சில டிவிகளுக்கு பேட்டி கொடுத்தார். மற்றபடி, மேடையில் பேசுவதுடன் சரி. இந்நிலையில் இருவரும் சென்னை ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்துள்ளனர். பத்ம பூஷன் விருது வாங்கிவிட்டு சென்னை வந்த அஜித், ஏர்போர்ட் வாசலில் மீடியாவிடம் சில வார்த்தைகள் பேசினார். ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மதுரை செல்லும் முன்பு சென்னை ஏர்போர்ட் வாசலில் விஜய் பேட்டி கொடுத்துள்ளார். இருவரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மீடியா, ரசிகர்கள் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த மாற்றம் தொடருமா?