சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிம்பு பேசியது
தில்லுக்கு துட்டு, டிடி முந்தைய பாகங்கள் என்ஜாய் செய்து பார்த்தேன். சந்தானம் என் நண்பராக இருந்தாலும்,.நான் ரசிகனாக பார்த்தேன். இதில் சந்தானம் கலக்கி இருக்கிறார்..அவர் பாடி லாங்குவேஜ் நல்லா இருக்குது..படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையணும். மன்மதன் காலத்திலேயே சந்தானம் ஒரு 3 பேர் டீமை வச்சு இருப்பார். அன்று முதல் இன்று வரை அந்த டீம் இருக்கிறது..அந்த உழைப்பு அப்படியே தொடர்கிறது.
ரெடின் கிங்ஸ்லியை கோலமாவு கோகிலா காலத்தில் உங்களுக்கு தெரியும். எனக்கு அவரை வேட்டை மன்னன் காலத்தில் இருந்தே தெரியும். அவர் பெரிய ஆள் ஆவார் என அப்போது சொன்னேன். அந்த பட இயக்குனர் நெல்சன் சிரிப்பார். இப்ப அவர் படங்களில் கிங்ஸ்லி இல்லாமல் இல்லை
இந்த படத்தில் கவுதம் மேனனை வேற மாதிரி இருக்கிறார். அந்த டிரைலரில் அந்த பாட்டு இருக்கிறது..அவர் சும்மா விடமாட்டார்
எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யுங்க. மற்றவர்கள் கேரக்டர் பற்றி கவலைப்படாதீங்க. பல நிகழ்ச்சிகளில், பேட்டிகளில் அவர் என்னை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். அது பற்றி என்னிடம் கேட்பார்கள். நான் அதுதான் சந்தானம் என்பேன்
எஸ் டி ஆர் 49 படத்தில் ஏன் சந்தானம் என்று கேட்கிறார்கள். இப்ப தமிழ் சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. ஆக்ஷன் படங்கள் அதிகம் வருது..பீல் குட், ஹேப்பி ஆன படங்கள் வரணும் .சரி அந்த படத்தில் சந்தானம் நடிப்பாரானு பலர் கேட்டார்கள். நான் போன் பண்ணினால் போதும் என்றேன். அது நடந்தது.அதேபோல் அவர் போன் செய்தால் நான் இந்த விழாவுக்கு வந்தேன். இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும்.இனி அவர் அதிக படங்களில் நடிப்பார்.
இவ்வாறு சிம்பு பேசினார்.