மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 1ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. இப்படத்திற்கான விமர்சனம் பெரும்பாலும் நெகட்டிவ் ஆகத்தான் வெளிவந்தது. முதல் ஓரிரு நாட்கள் படத்தின் வசூல் நன்றாக இருந்ததாகவே தகவல் வெளியாகின.
46 கோடி வசூல் என படம் வெளியான மறுநாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதற்கடுத்து நான்கு நாட்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே, சற்று முன் இப்படம் 104 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
படம் லாபமா, நஷ்டமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். இருந்தாலும் நாளை சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இப்படத்திற்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். படம் வெளியான பின்பு சென்னையில் கூட இல்லாமல் மும்பை சென்றுவிட்டார் சூர்யா. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மட்டும் ஓரிரு தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.