சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல சங்கங்களில் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கென முக்கியமான நான்கு சங்கங்கள் உள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இவற்றில் எந்த ஒரு சங்கத்திலாவது தயாரிப்பாளர் ஆகப் பதிவு செய்த பிறகு திரைப்படங்களைத் தயாரிக்கலாம்.
ஆனால், படங்களின் வெளியீடு என்று வரும் போது இந்த சங்கங்கள் அதை ஒழுங்குபடுத்தும் ஒரு நடைமுறையை இதுவரையில் செய்யாதது பல தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வெளியீட்டுத் தேதியை முன்னரே சொல்லி அதற்கேற்றபடி படங்களை வெளியீடு செய்யும் ஒரு முறையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடைபிடித்து வந்தது. கொஞ்ச நாட்கள் மட்டும் நடந்து அதன்பின் அதுவும் காணாமல் போனது.
இருக்கும் முக்கியமான தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய படங்களின் வெளியீடுகளில் ஒரு ஒழுங்கு நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகத்திலேயே நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அதை செயல்படுத்த சம்பந்தப்பட்ட சங்கங்கள் முயற்சிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
நாளை மே 9ம் தேதி “அம்பி, எமன் கட்டளை, என் காதலே, கஜானா, கீனோ, நிழற்குடை, சவுடு, வாத்தியார் குப்பம், யாமன்,” ஆகிய 9 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் பிப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் 9 படங்கள் ஒரே நாளில் வெளியாகின. மீண்டும் இப்போது அதுபோல வெளியாக உள்ளது. அடுத்து இப்படி ஒரு நிலை வராமல் தடுக்க திரையுலகினர் ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும் என்பதே சிறிய படத் தயாரிப்பாளர்களின் நிலையாக உள்ளது.