தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கூலி'. 'இன்னும் 100 நாளில்' என்ற கவுண்ட் டவுன் வீடியோ ஒன்றை இப்படத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள்.
அதில் சவுபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோரது பின் தலைப் பகுதியை மட்டும் காட்டி, கடைசியில் ரஜினியின் முகத்தை மட்டும் சைட் ஆங்கிளில் காட்டினார்கள். அந்த குறிப்பிட்ட 'ஷாட்'ல் உள்ள ரஜினியின் லுக்கை மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த 'தளபதி' பட ரஜினி லுக்குடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ரஜினி - லோகேஷ் கூட்டணியின் முதல் படம் என்பதாலும், ஒவ்வொரு தென்னிந்திய மொழியிலிருந்தும் முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் இடம் பெறுவதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதை இன்னும் அதிகமாக்கும் விதத்தில் 'இன்னும் 100 நாளில் கூலி' வீடியோ உள்ளதாக திரையுலகத்திலும் பேச்சு எழுந்துள்ளது.