தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை துவங்கியது. இதற்கு நாடு முழுக்க ஆதரவு பெருகியது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் இளையராஜா வெளியிட்ட பதிவில், ‛‛பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதை எதிர்த்து நமது வீரர்கள் எல்லைகளில் துணிச்சல் மற்றும் உறுதியுடன் செயல்படுகின்றனர். நமது தன்னலமற்ற வீரர்கள், எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன். பெருமைமிக்க இந்தியனாகவும், எம்பி.,யாகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வீரம் முயற்சிகளுக்காக, எனது இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்''. ஜெய் ஹிந்த்!
இவ்வாறு இளையராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.