சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இனிகோ பிரபாகரன், வேதிகா, சாந்தினி, மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு நடிப்பில், கடந்த வெள்ளி கிழமை வெளியாக இருந்த படம் கஜானா. காட்டில் இருக்கும் புதையலை தேடி செல்லும் குழுவை பற்றி விறுவிறு கதை. யாளி, பாம்பு, புலி, யானை என ஏகப்பட்ட மிருகங்களை கிராபிக்சில் கொண்டு வந்து இருந்தார்கள். அந்தவகைக்கு மட்டும் நிறைய செலவு செய்தார் இயக்குனர், தயாரிப்பாளரான பிரபதீஷ் சாம்ஸ். மே 9ம் தேதி படம் ரிலீஸ். ஆனால், படத்துக்கு 70 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தநிலையில், படத்தின் ரிலீசை படக்குழு ஒத்தி வைத்துவிட்டது.
தமிழ், தமிழர்கள் என பேசுபவர்கள் இந்த படத்துக்கு உதவி செய்யவில்லை. தமிழகத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு தரமான கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி இந்த படத்தை தயாரித்தோம். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்துக்கு போதுமான தியேட்டர் கிடைக்காதது, போர் சூழல் காரணமாக பட ரிலீசை தள்ளி வைக்கிறோம்' என படக்குழு அறிவித்துவிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை காட்சியுடன் கஜானா தள்ளி வைக்கப்பட்டது, படக்குழுவை கவலையடைய வைத்துள்ளது. போர் சூழல், சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் போன்ற காரணங்களால் கடந்த வாரம் வெளியான 9 படங்களில் எந்த படமும் வெற்றி பெறவில்லை. சில படங்கள் வந்ததே மக்களுக்கு தெரியவில்லை.