கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தி, கமல், விஜய், ரஜினி என டாப் நடிகர்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒரு பக்கம் துவங்கி உள்ளது.
இதனிடையே சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ‛‛நடிகர்கள் ரஜினி, கமல் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க முயற்சி எடுத்தேன். கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் என் இயக்கத்தில் ஒரு படம் கிட்டத்தட்ட உறுதியானது. கொரோனாவால் அது கைவிடப்பட்டது. இருவரையும் வயதான கேங்ஸ்டர்களாக காட்டும் ஒரு கதையும் வைத்திருந்தேன். வணிகம் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படத்தை எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. இது நடந்தால் நிச்சயம் பெரிய விஷயமாக இருக்கும்'' என்றார்.