சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சில பிறமொழி படங்களில் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்படும்போது வெற்றி பெற்றுவிடும், ஆனால் அதே கதை தமிழில் நேரடியாக ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்படும்போது தோல்வி அடையும். இப்படியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது. அவற்றில் ஒன்று 'லைலா -மஜ்னு'.
ரோமியோ - ஜூலியட், அம்பிகாபதி - அமராவதி, சலீம்-அனார்கலி போன்று உலக புகழ்பெற்ற அரேபிய காதல் கதை லைலா - மஜ்னு. மற்ற கதைகளை போலவே இந்த கதையும் உலகின் பல மொழிகளில் திரைப்படமாக வெளிவந்தது. இந்தியாவில் மவுன படங்கள் காலத்திலேயே இந்த கதை வந்து விட்டது. இந்தியாவின் பல மொழிகளில் தயாரான இந்த படம் தெலுங்குல் 1949ம் ஆண்டு வெளிவந்தது. பி.எஸ்.ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேசுவரராவ், பானுமதி முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். பாடல்களுக்கு சி. ஆர். சுப்பராமன் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழ் வசனங்களையும் பாடல்களையும் எஸ். டி. சுந்தரம் எழுதியிருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதே லைலா - மஜ்னு கதை அடுத்த ஆண்டே அதாவது 1950ம் ஆண்டு தமிழில் தயாரானது. இந்த படத்தில் மஜ்னுவாக டி.ஆர்.மகாலிங்கமும், லைலாவாக எம்.வி.ராஜம்மாவும் நடித்தனர். இவர்களுடன் எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.என்.ஜானகி, ஆர்.பாலசுப்ரமணியம், ஜி.எம்.பஷீர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கே.பி.காமாட்சி, பி.எஸ்.சிவபாக்யம், டி.எஸ்.காமாட்சி, பி.எஸ்.சிவபாக்யம், டி.எஸ்.காமாட்சி, 'காகா' ராதாகிருஷ்ணன். குசலகுமாரி உள்பட பலர் நடித்தனர்.
எஸ்.வி. வெங்கடராமன் இசை அமைத்தார். பாலாஜி பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டது. படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் முந்தைய தெலுங்கு டப்பிங் படத்தின் ஒப்பீடு காரணமாக இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.