தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜா ராணி சீரியல் நடிகையான அர்ச்சனா இப்போது சினிமாவில் முழு கவனம் செலுத்துகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதேசமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். சீனியர் நடிகர்கள் ஷபானா ஆஷ்மி, ஸ்மிதா படில், அர்ச்சனா(வீடு), ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் இவர்கள் எல்லாம் பிடிக்கும். கதாநாயகிகளாக அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். அதுபோல என் பணியிலும் நான் முத்திரை பதிக்க விரும்புகிறேன்" என்கிறார்.
இதற்குமுன்பு டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதி தங்கையாக நடித்தவர், இப்போது ஹீரோயினாக நடிக்க விரும்புகிறேன் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.