வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து, கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படம் திரைக்கு வந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் 16 நாட்களில் 63 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது டூரிஸ்ட் பேமிலி படத்தை வருகிற மே 24ம் தேதி ஜப்பான் மொழியில் வெளியிடுகிறார்கள். இந்த தகவலை இப்படத்தை உலகமெங்கும் வெளியிட்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது.
ரஜினி நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஜப்பான் மொழியில் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படமும் ஜப்பான் மொழியில் வெளியானது. இந்த நிலையில் தற்போது சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படமும் ஜப்பானில் வெளியாகப் போகிறது. தமிழக ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டனில் கூட இந்த டூரிஸ்ட் பேமிலி படம் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .