சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் இங்கு தயாரிப்பில் இறங்கியது தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் லாபத்தைக் கொடுத்த படம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லவ் டுடே, டிராகன்' நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க 'டூட்' படத்தை அடுத்து தயாரித்து வருகிறது. தொடர்ந்து தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் அந்நிறுவனம் புதிய படங்களைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துடனும் பேசி வருவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 'மென்டல் மதிலோ, அன்டே சுந்தரநிகி, சரிபொத சனிவாரம்' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான விவேக் ஆத்ரேயா அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல்.
ரஜினிகாந்த் தற்போது 'கூலி' படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் பேசி வருவதாகவும், கார்த்திக் சுப்பராஜ் அதை இயக்கலாம் என்றும் தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. தற்போது தெலுங்கு நிறுவனம், இயக்குனர் பெயரும் அடிபடுகிறது. யாருக்கு முன்னுரிமை என்பது விரைவில் தெரிய வரும்.