'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கோமாலி பிரசாத். நீனு சீதா தேவி, நெப்போலியன், ரவுடி பாய்ஸ் என பல படங்களில் நடித்தவர் ஹிட் : செகண்ட் கேஸ், தேர்ட் கேஸ் படங்களின் மூலம் புகழ்பெற்றார். தற்போது 'சசிவதனே' என்ற படத்தில் நடித்து வருகிறார். கோமாலி பிரசாத் அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கனை. அதனால்தான் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "என்னுடைய ரிங் டோனே 'நானும் ரெளடிதான்' படத்தில் இருந்து 'நீயும் நானும்...' பாடல்தான். தமிழ் மொழி மீதுள்ள காதலால் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். ஆக்டிங் டிரைனர் சூரி எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இயக்குநர்கள் சி. பிரேம்குமார், அல்போன்ஸ் புத்திரன், மணிகண்டன் படங்களில் பணிபுரிய ஆசை. அதேபோல நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் இவர்களைப் பார்த்து எப்போதும் வியப்பேன். அஜித் சார் எப்போதும் என் பேவரிட். அவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். என்றென்றும் அவர் எனது இன்ஸ்பிரேஷன். நான் நடிக்கும் தமிழ் படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் " என்றார்.