சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத ஜனரஞ்சக இயக்குனர்களில் மிகவும் குறிப்பிடும்படியான ஒருவர் என்றால் அது நிச்சயம் இயக்குநர் எஸ் பி முத்துராமன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 1972ம் ஆண்டு தயாரிப்பாளரும், இயக்குநருமான வி சி குகநாதன் தயாரிப்பில் வெளிவந்த “கனிமுத்துப் பாப்பா” என்ற திரைப்படத்தின் வாயிலாக ஒரு இயக்குநராக அறியப்பட்டு, தொடர்ந்து “காசியாத்திரை”, “எங்கம்மா சபதம்”, “துணிவே துணை” போன்ற வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த இவரது இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு வெற்றித் திரைப்படம்தான் “மயங்குகிறாள் ஒரு மாது”.
தமிழில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் “பாலு ஜேனு” என்ற பெயரில் வெளிவந்த இத்திரைப்படத்தில், தமிழில் நடிகர் தேங்காய் சீனிவாசன் ஏற்று நடித்திருந்த போட்டோ கிராபர் கதாபாத்திரத்தை கன்னடத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்று நடித்திருந்தார்.
“மயங்குகிறாள் ஒரு மாது” திரைப்படத்தின் இறுதியில் படத்தின் நாயகி இறப்பது போல் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த பட விநியோகஸ்தர்கள் இந்தப் படத்தை வாங்க மறுத்தனர். படத்தின் இயக்குநர் எஸ் பி முத்துராமன் இதுதான் படத்தின் முடிவு என்று படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட தீர்மானிக்க முடியாதபடியும், அதே சமயம் புரட்சிகரமாகவும் இருக்க வேண்டும் என்ற முடிவில் அவர் தீர்க்கமாக இருந்ததால் விநியோகஸ்தர்களின் விருப்பத்தை ஏற்க மறுத்துவிட, படத்தின் தயாரிப்பாளரே படத்தை விநியோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பின் படம் வெளிவந்து படத்தின் முடிவு பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியையும் ஈட்டித் தந்தது. “மாடர்ன் தியேட்டர்ஸ்” ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பஞ்சு அருணாச்சலம் எழுத, படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் எஸ் பி முத்துரான். 1970களில் திரையிசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜயபாஸ்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
“சுகம் ஆயிரம் என் நினைவிலே”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன்”, “வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்” போன்ற படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. ஆர் முத்துராமன், சுஜாதா, விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, தேங்காய் சீனிவாசன், எஸ் ஏ அசோகன், எம் என் ராஜம், செந்தாமரை, காந்திமதி ஆகியோரின் நடிப்பில் 1975ம் ஆண்டு மே 30 அன்று வெளிவந்து தனது பொன்விழா ஆண்டான 2025ல் மலைக்கச் செய்யும் ஆண்டு ஐம்பதினை நிறைவு செய்து, இன்னும் நம்மை மயக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றாள் இந்த “மயங்குகிறாள் ஒரு மாது”.