சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி வசந்த். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக தமிழ் பேசுகிறார். ஏஸ் படம் பெரிய ஹிட் ஆகாவிட்டாலும் ருக்மணி நடிப்பு, அழகு பலரை கவர்ந்துள்ளது. அதனால், அடுத்த ஆண்டு அவர் பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு.
ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர் ருக்மணி. அவர் தந்தை வசந்த் வேணுகோபால் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர். உயரிய ராணுவ விருது பெற்றவர். ராணுவ குடும்பங்களுக்கு உதவி வருகிறார் பரதநாட்டிய கலைஞரான அவர் தாய். இதற்குமுன்பு கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ருக்மினி. அதனால், நல்ல கதை, நல்ல கேரக்டரில் மட்டுமே நடிப்பது என அவர் முடிவெடுப்பாராம்.
தமிழில் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற பலர் ஒரு வயதை தாண்டிவிட்டதால் ருக்மினி, கயாடு லோஹர், மமிதா பைஜூ போன்றவர்களுக்கு கோலிவுட்டில் மவுசு உருவாகி உள்ளது.