‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை |
சசி இயக்கிய 'பூ' படத்தில் மலையாள நடிகையான பார்வதி ஹீரோயினாக நடித்தார். அவர் நடித்த சிறந்த படங்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது. இன்றும் அவரை பலரும் பூ பார்வதி என்று அழைக்கின்றனர். அடுத்து அவர் இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் லிஜோமோல் ஜோஸ் சிறப்பாக நடித்தார். 'பிச்சைக்காரன்' படத்தில் சாத்னாவும், 'டிஷ்யூம்' படத்தில் சந்தியாவும் ஹீரோயினாக நடித்திருந்தனர். அவர் படங்களில் நடித்த இந்த மலையாள நடிகைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டது.
இந்நிலையில், சசி இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் 'லப்பர் பந்து, மாமன்' படங்களில் நடித்த மலையாள நடிகையான சுவாசிகா முக்கியமான வேடத்தில் வருகிறார். இது விஜய் ஆண்டனி, அவர் மருமகன் அஜய் இணைந்து நடிக்கும் இரட்டை ஹீரோ கதையாம். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதனால், இந்த படம் பிச்சைக்காரனின் அடுத்த பாகமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.