தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில், அடுத்த வாரம் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ள படம் 'தக் லைப்'. பொதுவாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது மற்றவர்கள் படங்களை வெளியிட மிகவும் யோசிப்பார்கள். தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காது, ரசிகர்களும் வருவார்களா என்ற சந்தேகம் எல்லாம் இருக்கும்.
ஆனால், 'தக் லைப்' வெளியாகும் அதே வாரத்தில் 'பரமசிவன் பாத்திமா, பேரன்பும் பெருங்கோபமும், மெட்ராஸ் மேட்னி' ஆகிய படங்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். 'தக் லைப்' படத்தை ஆளும் கட்சிக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அதனால், முக்கியமான தியேட்டர்கள் அனைத்தையும் அவர்களே எளிதில் பெற்றுவிடுவார்கள். அப்படியான ஒரு சூழலில் மற்ற படங்களுக்கு முக்கியமான தியேட்டர்கள் எப்படி கிடைக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பெரிய படம், சிறிய படம் என்பதெல்லாம் வெளியீட்டிற்கு முன்புதான். படம் வெளியான பின்பு வரவேற்பைப் பெறும் படமே பெரிய படம் என்று சொல்வார்கள். மே 1ம் தேதி வெளியீட்டிற்கு முன்பு 'ரெட்ரோ' பெரிய படமாக இருந்தது. ஆனால், வெளியீட்டிற்குப் பின்பு அதேநாளில் வந்த 'டூரிஸ்ட் பேமிலி' படமே பெரிய படமாக மாறியது. அது அடுத்த வாரம் நடக்குமா அல்லது மற்ற மூன்று படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.