சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த வருடம் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, மலையாளத் திரை உலகில் பெண்கள், குறிப்பாக நடிகைகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர் என்கிற விஷயத்தை உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து வெளிப்படையாக சில நடிகைகள், சில நடிகர்கள் இயக்குனர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, சில கைதுகளும் நடந்தன. இது தவிர ஹேமா கமிட்டி பல பேரிடம் வாக்குமூலமும் பெற்றதும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தது, அதன் அடிப்படையிலும் பல வழக்குகள் பதியப்பட்டன. இப்படி கிட்டத்தட்ட 40 வழக்குகள் பதியப்பட்டு நிலையில் தற்போது அவற்றில் 35 வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி போலீசார் அந்த வழக்குகளை அவசர அவசரமாக முடித்துள்ளனர்.
நடிகர்கள் சித்திக், முகேஷ், மணியன் பிள்ள ராஜு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்குகள் மட்டும் நிலுவையில் இருக்கின்றன. போலீசார் அவசரமாக வழக்குகளை முடித்ததாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஹேமா கமிட்டி விசாரணையின் போது பல பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் யாருமே நேரடியாக இந்த வழக்கில் சாட்சியங்களை சொல்லவோ, அடுத்த கட்டத்திற்கு இந்த வழக்கை நடத்திச் செல்லவும் முன்வராமல் ஒதுங்கி விட்டனராம். இதனாலேயே இந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் இப்படி ஹேமா கமிட்டி விசாரணை குழு உருவாவதற்காக, கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக குரல் கொடுத்த நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.. ஹேமா கமிஷன் அறிக்கை தாமதமாக வெளியானாலும் அதன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், தற்போது இந்த வழக்குகள் அவசரமாக மூடப்பட்டதை தொடர்ந்து தனது விரக்தியை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார், பார்வதி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தைப் பற்றி இப்போது நாம் கவனம் செலுத்தலாமா?? கொள்கைகளை வரையறுப்பதன் மூலம் இந்த துறையில் நடைமுறைகளை கொண்டு வர முடியுமா? அதில் என்ன நடக்கிறது? ஒன்றும் அவசரமில்லை தானே? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே தானே ஆகிறது?'' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.