தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் பென்ஸ். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடிக்கிறார். கதையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இருக்கிறார். நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த இரண்டு நிமிட புரொமோ வெளியாகி உள்ளது. இதில் பல ஆச்சரியங்கள் நமக்கு காத்திருக்கின்றன.
அதாவது படத்தில் இவர் வில்லன் என்றாலும் இவரே இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் வால்டர் என்கிற கொடூர வில்லனாகவும், அவரை எதிர்க்கின்ற பென்ஸ் என்கிற இன்னொரு கதாபாத்திரமாகவும் நிவின்பாலி நடிக்கிறார் என்பது இந்த புரோமோவில் தெரிய வந்துள்ளது. பொதுவாக படத்தின் டைட்டிலில் இடம் பெறும் பெயர் ஹீரோவுக்குத்தான் சூட்டப்படும். இந்தப் படத்தில் அதிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்கள்.
இதற்கு முன்பாக ஏ.ஆர் முருகதாஸ் சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி திரைப்படத்தில் கூட வில்லனுக்கு தான் கஜினி என டைட்டில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல இந்த படத்தில் நிவின்பாலியின் கதாபாத்திரங்களை பார்க்கும்போது ராகவா லாரன்ஸுக்கு இணையாக இவரது கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.