பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் |
இந்திய திரைப்படங்களில் பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதை அம்சம் கொண்ட படங்கள் குறைவாகவே வெளியானாலும் அதில் எல்லாமே ஆண்கள் தான் சூப்பர் ஹீரோவாக நடித்து வந்தனர். பெண்கள் சூப்பர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்களா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி எந்த படமும் இல்லை.
இந்த நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அப்படி முதன்முறையாக சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெருமையையும் பெற்றுள்ளார். மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் லோகா சாப்டர் 1 ; சந்திரா என்கிற படத்தில் தான் சூப்பர் ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒரு சூப்பர் ஹீரோவுக்கான ஆடையுடன் காட்சியளிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
கதாநாயகனாக பிரேமலு புகழ் நஸ்லேன் நடிக்க, துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. டோமினிக் அருண் இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்தடுத்த பாகங்களாகவும் தயாராகும் என்பது இதன் டைட்டிலை பார்க்கும்போது தெரிகிறது. சூப்பர் ஹீரோயின் கதை அம்சம் கொண்ட படம் என்றாலும் மலையாள நேட்டிவிட்டியுடன் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.