தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

வைபவ் நடிக்கும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தில் அதுல்யா ரவி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த பட நிகழ்ச்சியில் அவரிடம் நீங்க பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் செய்துள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் வருகிறதே, அது உண்மையா என்று கேள்வி எழுப்பட, அதை மறுத்தார்.
ஆனால், கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில், ''முகத்தை அழகாக அதுல்யா ஆபரேஷன் செய்தது உண்மை. அவர் மட்டுமல்ல, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் போன்றவர்களும் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சற்றே மாற்றி இருக்கிறார்கள் அல்லது அழகாக்கி இருக்கிறார்கள். ஹாலிவுட்டில், பாலிவுட்டில் இது போன்ற சிகிச்சை முறைகள் சகஜம். இப்போது தமிழ்சினிமாவிலும் வந்துள்ளது. ஒரு பிரபல ஹீரோ கூட இப்படிப்பட்ட சிகிச்சை எடுத்து இருக்கிறார். இதன் பக்க விளைவுகள் குறைவு, தழும்பு தெரியாது. என்ன சில லட்சங்கள் செலவாகும்'' என்கிறார்கள்.