நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, தேவா, விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இசை அமைப்பாளர் டி.இமானும் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சி நாளை (14ம் தேதி) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இமான் விடுத்துள்ள அறிக்கையில் "எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஜூன் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடப்பதாக இருந்த 'டி.மான் லைவ் இன் கான்சென்ட்' தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான முடிவை நாங்கள் எடுக்க வேண்டியதாயிற்று.
இந்த நேரத்தில் உங்கள் பொறுமை மற்றும் ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி கூறுகிறோம். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்பட்டும். டிக்கெட் கட்டணங்களை 7 நாட்களுக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். உங்களின் தொடர்ச்சியான அன்பிற்கு, நன்றி. விரைவில் மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்கும் நிகழ்ச்சியுடன் சந்திக்கிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.